பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்
தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!












பேரவை துணைப்பொருளாளராகப் பணியாற்றி வருகின்றார். அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், இயக்குனர் குழுவின் பெருந்தலைவராகவும், பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவராகவும், பேரவை விழா ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், நிதிதிரட்டுவதில் முன்னணிப் பொறுப்பாளராகவுமென, அமெரிக்காவில் பல பணிகளைக் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர். வர்மக்கலை ஆசான் பட்டம் பெற்றவர்.
என் வாழ்வின் பெருமைக்குரிய நாள், வர்ம ஆசான் பட்டம் பெற்ற நாள். இதைத் தமிழ்த் தாய்க்கு நான் செய்யும் சேவையாக கருதுகிறேன்.
நான் வர்ம ஆடிமுறையை பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறேன்; அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் இக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் வாழ்வின் முக்கிய குறிக்கோள்.
தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் காவலர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தேன். நம் தமிழர்களின் வர்ம ஆடிமுறையைப் பயன்படுத்தி காவல்துறைப் பயிற்சிப் பாடத்திட்டம் மற்றும் செய்முறைத் திட்டங்களை மேம்படுத்த அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களின் தலைமையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம், பேரணியை தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், தமிழ் உணர்வு கொண்ட அணைத்து தமிழர்களுடனும் ஏற்பாடு செய்து கலந்து கொண்ட பொழுது
நான் 2014 கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கத் தலைவராக இருந்தபோது. எண்ணிலடங்கா விழாக்களை நடத்தி மக்களைச் சங்கம் பக்கம் ஈர்த்து மிகச் சிறப்பாக நடக்கப்பெற்ற வருடம் என்ற பெயரை அட்லாண்டாவில் பலரும் போற்றும்டியாக அமைந்தது.
ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தமிழ் பயிலும் தமிழ்ப்பள்ளியில் பட்டம் கொடுக்கும் விழாவில் தலைவராக கலந்து கொண்டு பட்டம் கொடுத்த தருணம்.