
Meet 'the United For FeTNA' Team

Vijay Manivel

Ezhilan Ramarajan

Dr. Kabilan Velliya

Jansirani Prabakaran

Vallikkannan Maruthappan

Suba Sundaralingam

Dr Bharathi Pandi

Karthik Perumal

Shan Kuthalingam

Vetrivel Periyaiyah

Aarthika Kumaresh

Roshan Srinivasan

தொலைநோக்கு
அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பார்வையுடன் செயற்பட்டுப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதும் விழிப்புணர்வை ஊட்டுவதும். அமெரிக்க விழுமியங்களைக் கொண்ட வழிகாட்டு ஆவணங்களைக் கட்டமைப்பது.
வெளிப்படை
மேற்கொள்ளும் பணிகளின் நிலைப்பாடு, கணக்குவழக்குகள், உறுப்பினர் அமைப்புகளின் தொடர்பு முதலானவற்றை வெளிப்படையாக வைத்துக் கொள்தல். இணையப் பக்கத்தைத் திறம்படப் பராமரிப்பதன் வழி அதனைச் சாத்தியமாக்குவது.
அறம்
தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடாமல் நெறிகளுக்கொப்பப் பணிகள் இடம் பெறுதலை உறுதிப்படுத்துதல். சாதி, சமய, இடம், பால் முதலான பேதங்களோ பக்கச்சாய்வோயின்றி ஒவ்வொரு செயலும் இடம் பெறும் வகையிலான நிர்வாகத்தினைக் கட்டமைப்பது.
இலக்கு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பணிகளை கூடுதலான மாகாணங்களுக்கும் விரிபடுத்துதலும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கட்டமைத்தலும். தமிழ்ச்சங்கங்களே அடிப்படையென நிறுவுதல். சங்கங்களுடனான கூட்டியக்கம் (federalism) மேம்படுத்துதல்.
அரவணைப்பு
பேரவையின் அங்கமாக இருக்கின்ற தமிழ்ச்சங்கங்களின்பாலும், மற்றுமுள்ள தமிழ் அமைப்புகளின்பாலும் அக்கறையுடன் செயற்படுதல். பேரவையின் நிர்வாகத்தில் சங்கத்தின் பங்கினை நேரடியாகக் கொண்டு வருதல். எல்லாப் பேராளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஊர்கூடித் தேர் இழுக்கும்படியான ஒருங்கமைப்பு மேற்கொள்வது.
பொறுப்பு
மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாகச் செயற்படுத்தலுக்கான கடமையுணர்வை உறுதிப்படுத்துதல். செயற்குழு முடிவுகளை உடனுக்குடனே பகிரங்கமாகப் பொதுவெளியின் பார்வைக்கு வைத்தல்.
ஒப்பீடுகள்
இன்று
- வெளிப்படைத்தன்மைப் போதாமை.
- சட்டக்கோப்பில் மேம்பாடின்மை.
- கமிட்டிகளில் பன்முகத்தன்மையின்மை.
- வருமானவரித் தாக்கலில் தொடர்தாமதம்.
- தனிநபர் வணிக நாட்டத்துக்கு இடமளிப்பு.
- தகவற்தொடர்பில் பாரபட்சம்.
- உறுப்புச் சங்கங்களுடனான உறவில் பாகுபாடு.
- பேரவை நெறிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை.
- அரசியல் குறுக்கீடுகளும் மேலாதிக்கமும்.
- கணக்கு வழக்குகளில் முரண்பாடு.
- செயல்பாடட்ற இணையதளம்.
நாளை
- செயற்குழு, பொதுக்குழுக்கூட்ட முடிவுகள் உடனுக்குடன் பொதுவெளியில் பகிரப்படும்.
- சட்டக்கோப்பில் காலத்துக்குத் தேவையான மேம்பாடு கொள்ளப்படும்.
- கமிட்டிகளில் சகலதரப்பும் இடம்பெறும்.
- வருமானவரித் தாக்கல் ஏப்ரல் மாதத்திற்குள் செய்யப்படும்.
- தனிநபர் ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்படும்.
- தகவல்தொடர்பு பரவலாக்கப்படும்.
- பேராளர்களுக்குக் கமிட்டிகளில் முன்னுரிமை.
- ஆயுள் உறுப்பினர்களின் நேரடிப் பங்களிப்பு வலியுறுத்தப்படும்.
- அமெரிக்க விழுமியங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்.
- கணக்குகள் உரிமம் பெற்றவர்கொண்டு தணிக்கை செய்யப்படும்.
- இணையதளம் உடனுக்குடனான தரவுகளுடன் மேம்படுத்தப்படும்.
சொல்லில் நேர்மை, செயலில் உறுதி, தலைமையில் திடம்!
வாழ்க தமிழ்! யாதும் ஊரே யாவரும் கேளிர்!!
பரவலாக்கம்
diversity
சீரமைவு
balance
புவியியற்பிரதிநிதித்துவம்
geographical representation












மதிப்புரைகள்
தமிழ்க் கலைகளை ஊக்குவித்தல், தமிழ்ப் பண்பாடு போற்றுதல், ஹார்வர்டு தமிழ் இருக்கை நிதி திரட்டல், தமிழர் மேம்பாடு, தமிழ் அமைப்புகளுக்கு இணைய வடிவமைப்பு என வட அமெரிக்காவில் தமிழுக்காக ஓயாது உழைக்கும் உன்னத தமிழர் விஜய் மணிவேல்.
அருமை நண்பர் விஜய் ஆனந் மணிவேல் தாராள மனது, பெருந்தன்மை, தொலைநோக்குப்பார்வை, எடுக்கும் பணியில் மிக்க கவனம், பொறுமை, பணிவு எனப்பல அருமையான குணங்கள் கொண்ட ஒரு அற்புதமான மனிதர்.
நலிந்த கலைஞர்களுக்கும் தமிழ்க்கலைகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பவர். நேர்மையான உழைப்பாளி. தகுந்தவரைத் தலைவராக்கிக் கொள்வது தமிழர் கடமை.
தன்னலமற்ற சேவை, அப்பழுக்கற்ற தலைமை, தொலைநோக்குப் பார்வை – இது தான் விஜய் மணிவேல்.
மாறாச் சிரிப்புடன் கூடிய கடின உழைப்பு, பேரவையின் முகமான இணையதளத்தை நிர்வகித்தது முதல் பல ஆண்டுகள் தமிழ்ப்பேரவைக்காக, தம்பி விஜய் மணிவேல் பங்களிப்பு பேரவைக்கு அவசியம்.
தலைமைப் பண்பு மிக்கவர், உண்மையான உழைப்பு, தமிழ் மொழி, இனம் ஆகியவற்றுக்கான தன்னலமற்ற அரும்பணி போன்ற உயரிய விழுமியங்களின் பெட்டகமே திரு விஜய் மணிவேல் அவர்கள்!
பேரவைக்கு முதன்முதலாக 2009-2010ல் நல்லதொரு இணையதளத்தை கட்டியெழுப்பியது விஜய் மணிவேல். பல மணிநேரங்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். விஜய் எவ்வித பலனும் எதிர்பாராமல் வெறித்தனமாக பணியாற்றுவார்.
Its not easy task to coordinate with Artists in India, paperwork and all the formalities. You are owning this huge task and doing it not just for your members but also for other sangams. It saves everyone money and at the same quality program for the members. I wanted to pass along our sincere thanks for all the effort your team is putting towards this.