Aarthika Kumaresh
For FeTNA - Youth Member
தமிழ் நூலாசிரியர், தமிழ்க்கலை பயிற்றுநர், மக்கள்தொடர்பு, இதழியல் முதலான தளங்களில் முன்னோடியாக விளங்குபவர். மனித உரிமை முன்னெடுப்புகளில் அனுபவம் கொண்டவர். டொரண்டோப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்தவர். பன்னாட்டுத் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டியாகவும் விளங்குபவர்.
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
- கனடியத் தமிழர் தேசிய அவையின் செயல்வீரராக விளங்குபவர்.
- ரொண்டோ பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி, குளோபல் ஹெல்த் ஆகிய துறைகளில் பட்டம் பெற்று, துறைசார் பணிகளில் தன்னார்வத் தொண்டும் தமிழர்களுக்கு வழங்கி வருபவர்.
- தமிழ் நூலாசிரியர், தமிழ்க்கலை பயிற்றுநர், மக்கள்தொடர்பு, இதழியல் முதலான தளங்களில் முன்னோடியாக விளங்குபவர்.
- மனித உரிமை முன்னெடுப்புகளில் அனுபவம் கொண்டவர்.
- டொரண்டோப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்தவர்.
- பன்னாட்டுத் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டியாகவும் விளங்குபவர்.
- கனடியத் தமிழ்ப் பள்ளியில் இளையோருக்கான விரிவுரையாளராகவும் பொதுப்பணி ஆற்றி வருகின்றார்.
- இளையோருக்கான படைப்பாக்கம், புத்தாக்கம் குறித்தான பாசறைகளையும்(workshop) நடத்தி வருபவர்.
- சிறுவர்களுக்கான இதழ்களை ஆங்கிலம், தமிழ் மொழியில் படைத்துப் பதிப்பிக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
ஆற்றிய மற்ற தமிழ்ப்பணிகள்
- தமிழ் சார்ந்த அமைப்புகளின் இணையதளத்துக்கான தரவுகளைச் சேமித்துக் கொடுப்பது, படைப்புகளை எழுதித் தருவது முதலான தன்னார்வப் பணிகள் செய்து வருகின்றார்.
- புலம் பெயர்ந்த தமிழருக்கான அரசுசார்ப் பணிகளில் உதவி புரிந்து வருகின்றார்.
- கனடிய, அமெரிக்க அரசியல்சார் நிகழ்வுகளைத் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதிலும், ஒருங்கிணைத்துக் கொடுப்பதிலும் நாட்டம் கொண்டு ஈடுபட்டு வருகின்றார்.
- நாடக நாட்டியங்களில் விருப்பமுள்ளோருக்கு, மரபுசார் பயிற்றுநர்களுடனான ஒருங்கிணைப்பை மேற்கொண்டு வருகின்றார்.
- ஆங்கிலம், பிரெஞ்ச் மொழி தெரியாதவர்களுக்கு, மொழியாக்கம் செய்து தருவதில் தன்னார்வப்பணி மேற்கொண்டு வருகின்றார்.