Dr Bharathi Pandi

For FeTNA - Board of Director

வடகரொலைனா தமிழ்ச்சங்கம். பேரவையின் தமிழறிவியல், விழாமலர், கல்வித்திட்டம் உள்ளிட பலகுழுக்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். வடகரொலைனாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர். பலநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியதில் அனுபவம் மிக்கவர். கல்வி, ஆராய்ச்சிப் பணிகளிலும் களமுன்னோடியாகவும் தலைவராகவும் விளங்குபவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள்

 

  • பேரவை வெளியிடும் ‘தமிழ் அறிவியல்’ ஆராய்ச்சி இதழ் ஆசிரியர் குழுவில் பங்களிப்பு
  • பேரவை பேராளராகவும் தன்னார்வலராகவும் விழாக்குழுக்களில் பங்களிப்பு
  • கெரோலினா தமிழ்ச்சங்கம், துணைத் தலைவர் (2012-2013)
  • கெரோலினா தமிழ்ச்சங்கம், இணைச்செயலர் (2022-2023)
  • கெரோலினா தமிழ்ச்சங்கம், தலைவர்,  (2024-2025)
  • கேரி தமிழ்ப் பள்ளியில் எட்டு ஆண்டுகள் ஆசிரியப்பணி
  • கேரி தமிழ்ப் பள்ளி  தர அங்கீகாரம் (accreditation ) குழுவில் பணி
  • அமெரிக்கத் தமிழ் அகாடமி முதல் நிலை புத்தகம் ஆசிரியர் குழு
  • கவியரங்கம் , பட்டிமன்றம் நிகழ்ச்சிகள் பங்கேற்பு
  • தமிழ்ச்சங்க விழாக்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒயிலாட்டம் , கிராமிய நடனம் , கபடி பயிற்சி
  • மின்னசோட்டாவில் நடந்த பெட்னா விழாவில் சிறுவர்களுக்கான ‘தளிர் மலர்’ ஆசிரியர்
  • பெட்னா விழாக்களில் ஒயிலாட்டம் நிகழ்ச்சி அளிப்பு
  • சல்லிக்கட்டு ஆதரவாக ஒருங்கிணைப்பு கூட்டம்
  • ஹார்வர்ட் தமிழ் துறைக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி
  • கெரோலினா தமிழ்ச் சங்கம், தமிழ் மனம் இதழ் தொடக்கம் , இதழ் ஆசிரியர்
  • கெரோலினா தமிழ்ச் சங்கம், இயக்குநர் (2010-2011)

 

ஆற்றிய மற்ற தமிழ்ப்பணிகள்

  • தமிழ்க் கலை, இலக்கிய, இசை நிகழ்ச்சிகள் மாகாணங்களில் ஒருங்கிணைப்புச் செய்தமை.
  • முருகன் கோவில் கட்டுவதற்கான முன்னெடுப்புகளில் உதவி புரிந்து வருவது.
  • ஆராய்ச்சிப் பணிகளில் தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவது.
  • அறிவியல், கணக்கு முதலான போட்டிகளில் நடுவராகப் பல பல்கலைக்கழகம், பள்ளிகளில் தன்னார்வத் தொண்டு புரிந்து வருவது.
  • பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சிகள், ஆய்வுப்பணிகள் முதலானவற்றுக்கு வழிகாட்டுவதற்கென்றே ஓர் இலாபநோக்கற்ற அமைப்பை நிறுவி சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்கின்றார்.
  • FeTNA இயக்குநர்(BoD) என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை நன்கு உணர்ந்த நான், விருப்பு வெறுப்பின்றி தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பேன் என்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் என்றும் உறுதி அளிக்கின்றேன்.
  • தங்களுடைய ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் நான் இந்தப் பணியை சிறப்பாகப் பொறுப்புணர்வுடன் செய்வேன் என்று உறுதி கூறுகின்றேன்.

பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்

தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!

Scroll to Top