Candidates

When we work together for our common good, with no hidden agenda, we can accomplish great things.

Meet 'the United For FeTNA' Team

Vijay Manivel

Vijay Manivel

For President
பேரவைத் துணைத்தலைவராகப் பணியாற்றி வருகின்றார். மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவராகவும், பேரவை விழாக்களின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ் அமைப்புகளில் தன்னார்வத் தொண்டராகவும் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருபவர். வெளிப்படையான பேச்சு, துணிவான செயல், மனிதநேயமுள்ள அணுகுமுறை முதலானவற்றுக்காக எல்லாத் தரப்பு மக்களாலும் நேசிக்கப்படுபவர். முருகன் கோவில் நிறுவனர், சமூகச்சீர்திருத்தவாதி, நாடளாவிய முன்னெடுப்புகளின் தூதுவர் எனப் பன்முகத்தன்மையோடு விளங்குபவர்.
Ezhilan Ramarajan

Ezhilan Ramarajan

For Vice President
பேரவை துணைப்பொருளாளராகப் பணியாற்றி வருகின்றார். அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவராகவும், பேரவை விழா ஒருங்கிணைப்பாளராக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக, நிதிதிரட்டுவதில் முன்னணிப் பொறுப்பாளராக எனப் பல பணிகளைக் கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் மேற்கொண்டு செய்து வருபவர். தொழில்முனைவோருக்கிடையே சிறந்த பாலமாகச் செயற்பட்டு வருபவர். தமிழின் தொன்மைக்கலைகளான சிலம்பம், வர்மம் முதலானவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வர்ம ஆசானாக பண்டைய தமிழர் மருத்துவம், போர்க் கலையை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருப்பவர்.
Dr Kabilan Velliya

Dr Kabilan Velliya

For Secretary
நியூசெர்சி தமிழ்ப்பேரவை. பேரவையின் தமிழ் அறிவியல் குழு, இணை அரங்கம் ஒருங்கிணைப்பாளர் குழு உள்ளிட்டவற்றில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். நியூசெர்சி தமிழ்ப்பேரவை, தமிழ்ப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவராகவும் தலைவராகவும் பணியாற்றியவர். அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகத்தில் தமிழ்ப்பாடத்திட்டம் வகுத்ததில் முன்னணி வகித்தவர். மக்கள் தொடர்பில் சிறப்புத் தகுதி படைத்தவர். ஆவணங்களைக் கையாள்வதிலும் தகவற்தொடர்பிலும் பயிற்சி பெற்றவர். அமைப்புகளின் சட்டக்கோப்பு, வழிகாட்டுக் கோப்பு(operating manual) முதலானவற்றைக் கட்டமைப்பதில் அனுபவம் கொண்டவர்.
Jansirani Prabakaran

Jansirani Prabakaran

For Joint Secretary
பேரவையின் இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருந்து அனுபவம் படைத்தவர். 25 ஆண்டுகாலமாகப் பேரவைக்காகப் பல்வேறு பொறுப்புகளில், விழாமலர் ஆசிரியர், இணை ஒருங்கிணைப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தமிழ்ப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர் எனச் செறிவான அனுபவத்துக்கு உரியவர்.
Vallikkannan Maruthappan

Vallikkannan Maruthappan

For Treasurer
பேரவையில் பல சீர்திருத்தங்களைச் செய்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களுக்குள் தொடர்பு, உறுப்பினர்களின் நிச்சயமற்ற சூழ்நிலைகளில் உதவி, நிகழ்வு மேலாண்மை போன்றவற்றுக்கு உதவியுள்ளார். கனடியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் தமிழ் மரபு மாநாட்டின் அமைப்பாளர், அதைத் தொடர்ந்து 2020 மற்றும் 2021 மாநாடுகளின் மாநாட்டின் அமைப்பாளர் - மொத்தம் 3 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.
Suba Sundaralingam

Suba Sundaralingam

For Joint Treasurer
பேரவையின் ஈழத்தமிழர்நலன், ஈழப்பணிகள், தமிழர்தொடர்புக் குழுக்களில் பணியாற்றி வருபவர். அமெரிக்காவில் தமிழர்நலன், தமிழ்க்கல்வி, கலை இலக்கியம் தொடர்பான பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகவும், போஸ்டன் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். நிதிக்கணக்கீடுகளில் ஆழ்ந்த அனுபவம் மிக்கவர்.
Dr Bharathi Pandi

Dr Bharathi Pandi

For Board of Director
வடகரொலைனா தமிழ்ச்சங்கம். பேரவையின் தமிழறிவியல், விழாமலர், கல்வித்திட்டம் உள்ளிட பலகுழுக்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். வடகரொலைனாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர். பலநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியதில் அனுபவம் மிக்கவர். கல்வி, ஆராய்ச்சிப் பணிகளிலும் களமுன்னோடியாகவும் தலைவராகவும் விளங்குபவர்.
Karthik Perumal

Karthik Perumal

For Board of Director
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், பேரவையின் அரசுத்தொடர்பு, தமிழ் கூறும் தலைமுறை, வணக்கம் வடஅமெரிக்கா இயல், உணவுத்திட்டமிடல், நிதித்திரட்டல் உள்ளிட்ட பல குழுக்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். Association of Indo Americans(AIA), Team, We Reach Out, விரிகுடா குறள் கூடம், Bay Area Fine Arts, California Tamil Academy போன்ற பல அமைப்புகளில் தன்னார்வத் தொண்டராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்.
Shan Kuthalingam

Shan Kuthalingam

For Board of Director
டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன். பேரவையின் அரசுத்தொடர்பு, கல்வியியல் முதலான குழுக்களில் பணியாற்றியவர். தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பு, பேராளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டவர். கலை, இலக்கியம், கல்விப் பணிகளுக்காகத் தொடர்ந்து தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வருபவர்.
Vetrivel Periyaiyah

Vetrivel Periyaiyah

For Board of Director
சியாட்டில் தமிழ்ச்சங்கம். பேரவையின் நிதிதிரட்டல்க்குழு, வாழ்வியல், மருத்துவம் முதலான குழுக்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து, சங்கத்தை நான்கு மடங்கு அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையிலும் நிதிப்பெருக்கத்திலும் மேன்மை கண்டவர். தமிழ்ப்பள்ளி சார்ந்த பணிகளில் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருபவர். தமிழ்க்கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக களத்தில் சுழல்பவர்.
Aarthika Kumaresh

Aarthika Kumaresh

For Youth Member
தமிழ் நூலாசிரியர், தமிழ்க்கலை பயிற்றுநர், மக்கள்தொடர்பு, இதழியல் முதலான தளங்களில் முன்னோடியாக விளங்குபவர். மனித உரிமை முன்னெடுப்புகளில் அனுபவம் கொண்டவர். டொரண்டோப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் சங்கத் தலைவராகவும் இருந்தவர். பன்னாட்டுத் தமிழ் மாணவர்களுக்கான வழிகாட்டியாகவும் விளங்குபவர்.
Roshan Srinivasan

Roshan Srinivasan

For Youth Member
ஆய்வுப் பணிகளில் நாட்டம் மிக்கவர். பல்கலைக்கழக அவசர உதவிக்குழு மாணவர் தலைவராகப் பணியாற்றிவர். அமெரிக்கக் கல்வி, நிதி உதவி பெறுதல் முதலான தளங்களில் தொடர்ந்து தகவற்தொடர்பில் ஈடுபட்டு வருபவர். மக்கள் பணியில் வேட்கை கொண்டவர்.
Scroll to Top