Ezhilan Ramarajan

Ezhilan Ramarajan

For FeTNA - Vice President

பேரவை துணைப்பொருளாளராகப் பணியாற்றி வருகின்றார். அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும், இயக்குனர் குழுவின் பெருந்தலைவராகவும், பேரவையின் பல்வேறு குழுக்களின் தலைவராகவும், பேரவை விழா ஒருங்கிணைப்பாளராகவும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், நிதிதிரட்டுவதில் முன்னணிப் பொறுப்பாளராகவுமென, அமெரிக்காவில் பல பணிகளைக் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்டு  வருபவர். வர்மக்கலை ஆசான் பட்டம் பெற்றவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள்

  • 2022-2024, பேரவையின் இளையோர் கல்வி & மேம்பாட்டுக் குழு, ஊடகத் தொடர்பு, நிதி முதலீட்டு திட்டக் குழு, வைப்புநிதி மேலாண்மைக் குழு ஆகியவற்றின் தலைவர், ஆலோசகர் முதலான பொறுப்புகளில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்.
  • 2020/2021 ஆம் ஆண்டுக்கான பேரவை விழாவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டிருக்கின்றார்.
  • 2022-2024, அமைப்பின் நிதி இருப்பை எங்கு, எப்படி முதலீடு செய்து, அவற்றை எப்படி நிர்வகிப்பது குறித்தான அறிக்கைகளை வரையறுத்துச் செயற்படுதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்.
  • பேரவை தொடர் செயல்பாடுகள் நிரந்தர நிதியம் (FRAPF) கொள்கை ஆவணம் மற்றும் தொண்டு செயல்பாடுகள் நிரந்தர நிதியம் (FCAPF) கொள்கை ஆவணம் உருவாக்கி குழுவில் தீர்மானம் கொண்டுவந்ததில் முக்கிய பங்கு இவரை சாரும். 
  • 2009ஆம் ஆண்டு பேரவை விழா துவக்கம் பல விழாக்களில் பல் வேறு கமிட்டிகளின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.
  • 2006 துவக்கம், தொழில்முனைவோருக்கிடையே சிறந்த பாலமாகச் செயற்பட்டு வருபவர்.
  • தமிழின் தொன்மைக்கலைகளான சிலம்பம், வர்மம் முதலானவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
  • வர்ம ஆசானாக பண்டைய தமிழர் மருத்துவம், போர்க் கலையை உலகம் முழுவதும் பரப்பிக் கொண்டிருப்பவர்.
  • 2020 பேரவை, தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளிகள் முதலானவற்றுக்காக பல்கலைக்கழக முன்னாள் மாணவர் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்புச் செய்து வருபவர்.
  • பேரவையின் தொழில்முனைவோர் மாநாட்டுத் துணை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து இருக்கின்றார்.
  • நிகழ்த்துகலைகள் (performing arts) குழுவின் தலைவராக இருந்து பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துள்ளார்.
  • 2023ஆம் ஆண்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் தேர்தலை மிக நேர்த்தியாக செயற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.
  • தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளிகளுக்கான சட்டக்கோப்புகள், நெறிமுறைக் கோப்புகள், ஒப்புதல் படிவங்கள், வழிகாட்டு ஆவணங்கள் முதலானவற்றை வரையறுத்துச் செயற்படுத்துதலில் நெடிய அனுபவம் கொண்டிருக்கின்றார்.

ஆற்றிய மற்ற பணிகள்

  • அமைப்புகளின் முரண்பாட்டுச் சிக்கல்கள், நிர்வாகச் சிக்கல்கள் நிமித்தம், சகல தரப்புகளுடனும் பேசித் தீர்வு எட்டப்படுவதில் பேலன்ஸ் அப்ரோச் கொண்டு செயற்பட்டு வெற்றிகள் பல கண்டவர். சிறந்த தலைவரெனப் பாராட்டுப் பெற்றவர்.
  • சட்டச்சிக்கல்கள் நேர்ந்தபோதெல்லாம் சட்டவல்லுநர்களின் ஆலோசனை பெற்றுத் திறம்படக் கையாண்டிருக்கின்றார்.
  • புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), உடன்பாட்டு அறிக்கை, அவசரகாலத் தீர்வு மையம் முதலானவற்றைக் கையாள்வதில் தேர்ச்சியும் அனுபவமும் மிக்கவர்.
  • பல்வேறு தமிழர் கலைகளுக்கான பயிற்சிப் பாசறைகளை முன்னின்று நடத்தியிருக்கின்றார்.
  • அன்றாட வாழ்வியற்பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு, அரசுத் தொடர்புகளைப் பெறுவதிலும் இந்தியத் தூதரகத் தொடர்புகளைப் பெறுவதிலும் நுட்பமான கையாள்கையைச் செயற்படுத்தி வருகின்றார்.
  • மரபுக்கலை நாடகங்களுக்கான விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகின்றார்.
  • காப்பீடு இல்லாத ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, அட்லாண்டா தமிழ் சங்கம் மூலம் பல்வேறு மருத்துவ சிகிச்சை மையத்தை நடத்தினார்.
  • தமிழ் சங்கம் மூலம் உருப்பெற்ற பல்வேறு தமிழ் பள்ளிகளுக்கு ஆதரவு கொடுத்து, ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் படிப்பதற்கு உதவியுள்ளார்.
  • இந்தியக் கல்வியாளர்களுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகத் தொடர்புகளுக்குமான ஒருங்கிணைப்புச் செய்திருக்கின்றார்.
  • அமெரிக்க மாணவர் அமைப்புகளுடனான அனுபவம் பெற்றிருக்கின்றார்.

தலைமைப் பண்புமிக்க எழிலன் குறித்த பார்வை

என் வாழ்வின் பெருமைக்குரிய நாள், வர்ம ஆசான் பட்டம் பெற்ற நாள். இதைத் தமிழ்த் தாய்க்கு நான் செய்யும் சேவையாக கருதுகிறேன்.

நான் வர்ம ஆடிமுறையை பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறேன்; அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் இக் கலையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது என் வாழ்வின் முக்கிய குறிக்கோள்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் காவலர் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தேன். நம் தமிழர்களின் வர்ம ஆடிமுறையைப் பயன்படுத்தி காவல்துறைப் பயிற்சிப் பாடத்திட்டம் மற்றும் செய்முறைத் திட்டங்களை மேம்படுத்த அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்களின் தலைமையில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம், பேரணியை தமிழ்ச் சங்கத் தன்னார்வலர்கள், தமிழ் உணர்வு கொண்ட அணைத்து தமிழர்களுடனும் ஏற்பாடு செய்து கலந்து கொண்ட பொழுது

நான் 2014 கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கத் தலைவராக இருந்தபோது. எண்ணிலடங்கா விழாக்களை நடத்தி மக்களைச் சங்கம் பக்கம் ஈர்த்து மிகச் சிறப்பாக நடக்கப்பெற்ற வருடம் என்ற பெயரை அட்லாண்டாவில் பலரும் போற்றும்டியாக அமைந்தது.

ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தமிழ் பயிலும் தமிழ்ப்பள்ளியில் பட்டம் கொடுக்கும் விழாவில் தலைவராக கலந்து கொண்டு பட்டம் கொடுத்த தருணம்.

பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்

தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!

Golden Memories

Scroll to Top