Jansirani Prabakaran
For FeTNA - For Joint Secretary
பேரவையின் இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார். விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருந்து அனுபவம் படைத்தவர். 25 ஆண்டுகாலமாகப் பேரவைக்காகப் பல்வேறு பொறுப்புகளில், விழாமலர் ஆசிரியர், இணை ஒருங்கிணைப்பாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், தமிழ்ப்பள்ளி நிர்வாகம், ஆசிரியர் எனச் செறிவான அனுபவத்துக்கு உரியவர்.
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
- பேரவையில் பல்வேறு குழுக்களில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றியமை.
- அமெரிக்காவெங்கும் உள்ள தமிழ்ச்சங்கங்களுடனான தொடர்பில் 20 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். பரந்த தொடர்பு வளையத்துக்கு உரியவர்.
- விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம் உருவாக்க உறுதுணையாக இருந்தார்( 2003).
- வெவ்வேறு தலைமைப் பொறுப்பை ஏற்று தமிழ் பணிகள் ஆற்றியுள்ளார் (தலைவர், செயலாளர், துணை செயலாளர், துணைத்தலைவர்).
- வட அமெரிக்க பேரவை விழாவுக்கு 2007 வருடம் முதல் இன்று வரை சென்று தன்னார்வத் தொண்டு செய்து வருகின்றார்.
- விஸ்கான்சின் தமிழ்ச்சங்க தமிழ்ப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்துள்ளார் (2003-2004).
- 2009’இல் அமெரிக்க தலைநகரான வாஷின்டன் DCயில் இலங்கைத் தமிழர்களைக் காக்க நடைபெற்ற மாபெரும் பேரணியில் விஸ்கான்சின் மாநிலத்திலிருந்து பேருந்தில் பயணம் செய்துவந்து பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார்.
- விஸ்கான்சின் தமிழ்ச் சங்கத்தில் வாழை இலை விருந்தினை ஆரம்பிக்க துணை புரிந்து இன்று வரை சிறப்பாக செயல் படுத்தி வருகின்றார்கள்.
- விஸ்கான்சின் தமிழ்ச் சங்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு தலைமை கட்டிடத்தில் கூடி முழக்கம் செய்து ஆதரவு தெரிவித்தமை.
- வட அமெரிக்க பேரவை விழா அட்லாண்டாவில் நடைபெற்றபோது நீயா நானா கோபிநாத் தலைமையில் நடை பெற்ற பேச்சரங்கத்தில் பங்கு கொண்டமை.
- தமிழகத்தில் பெருமழையால் ஏற்பட்ட சேதத்திற்கு எங்கள் தமிழ் சங்கத்தில், சிறப்பு நகைசுவை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி தொகையை திரட்டி கொடுத்தமை.
- ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய நிதி திரட்டியமை.
- வட அமெரிக்க பேரவை திட்ட குழுவில் பணியாற்றியமை.
- 2020 வருட, வணக்கம் வட அமெரிக்கா, ஆடல் குழுவில் தன்னார்வலராக தொண்டாற்றியமை.
- கடந்த 2022ஆம் ஆண்டு பெண்கள் அணி செயற்குழுவில் பொறுப்பேற்ற பிறகு செய்த முதல் செயல், தமிழகத்தில் கிராமத்தை தத்தெடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேவையான பொருட்களையும், பெண்களுக்கான சுகாதார பொருட்களையும் வழங்கியமை.
விருதுகள்
- 15 வருடங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த கலாச்சார ஒருங்கிணைப்பாளர் முன்னணி விருது (2019) AIA(Association of Indian Americans)
- பிரித்தானிய தமிழ் வானொலி மற்றும் பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்றமும் இணைந்து வழங்கிய ’உலகத் தமிழ்ப் பெண் விருது ’ (2021)
- தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் சிறந்த பெண் சாதனையாளர் விருது (2022)
- ஜனாதிபதி தன்னார்வ சேவை விருது(PVSA Award) – வெண்கலம் (2023)
- தெருக்கூத்து கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பெற போவது (June 2024)