Dr. Kabilan Velliya
For FeTNA - Secretary
முனைவர் அவர்கள் துணைப் பேராசிரியர். தகவற்தொடர்பில் தேர்ச்சி கொண்டவர். ஆவணங்களைக் கையாள்வதில் நெடிய அனுபவம் கொண்டவர். பேரவையின் தமிழ் அறிவியல் குழு, இணை அரங்கம் ஒருங்கிணைப்பாளர் குழு உள்ளிட்டவற்றில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். நியூசெர்சி தமிழ்ப்பேரவையின் நிறுவனர்களுள் ஒருவராகவும், தலைவராகவும் பணியாற்றியவர். தமிழ்க் கல்விப்புலத்தில் பாடத்திட்டங்கள் வகுப்பது, பள்ளிகளை ஒருங்கிணைப்பது, பயிற்றுவிப்பதெனத் தமிழ்க்களத்தில் துடிப்புடன் செயற்பட்டு வருபவர்.
ஏற்றுக்கொண்ட பொறுப்புகள்
- பேரவை தமிழ் அறிவியல்க்குழு உறுப்பினர், 2020-2024
- நியூசெர்சி தமிழ்ப்பேரவை நிறுவனத்தலைவர் 2019
- நியூசெர்சி தமிழ்ப்பேரவை நிர்வாகக்குழு (2019-நடப்பு)
- குமாரசாமி தமிழ்ப்பள்ளி நிர்வாகக்குழு 2013-நடப்பு
- குமாரசாமி தமிழ்ப்பள்ளி துணைத்தலைவர் 2014-நடப்பு
- நியூசெர்சி தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் (2018-நடப்பு)
- பேரவை கவிதைப் போட்டிகள் குழுத் தலைவர் 2019
- பேரவை தமிழ்ப்பள்ளிகள் ஒருங்கிணைப்பாளர் 2016
- பேரவை மாநாட்டு வருகைக்குழு 2016
- பேரவை இணை அரங்குகள் ஒருங்கிணைப்பாளர் 2016
- அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழக இயக்குநர் 2018
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
- கருத்தரங்குகளை நடத்துவதில் தேர்ச்சியும் அனுபவமும் கொண்டிருப்பவர்.
- கருத்துக்கேட்புத் தளங்களையும் முன்னெடுப்புகளையும் வடிவமைத்ததில் அனுபவம் கொண்டவர்.
- ஆவணங்களைக் கையாள்வதில் பல்கலைக்கழக அனுபவம் கொண்டிருப்பவர்.
- தரவுகளைப் பராமரிப்பது, சேமிப்பது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.
- பண்பாடு, கலை, கல்வி முதலானவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவர்.
- இளையோருக்கான ஊக்குவிப்பு முகாம்களை வகுத்தும் நடத்தியும் வருபவர்.
- உறுப்பினர் சேர்க்கையில் பரவலாக்கம், தொடர்பு முதலானவற்றில் அனுபவம் கொண்டவர்.
- ஆய்வுகளின் அடிப்படையில் புத்தாக்க முன்னெடுப்புகளைப் பரிந்துரை செய்து வருபவர்.
- நியூ செர்சியில் இருமொழி முத்திரை பெற மாணவர்களுக்கு வழிக்காட்டியாக தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
- நியூ செர்சி தமிழ்ப் பேரவை, குமாரசாமி தமிழ்ப் பள்ளி மற்றும் நியூ செர்சியில் இருக்கும் பல பள்ளிகளுக்கு சட்டக்கோப்புகள், நெறிமுறைக் கோப்புகள், ஒப்புதல் படிவங்கள், வழிகாட்டு ஆவணங்கள் முதலானவற்றை வரையறுத்துச் செயற்படுத்துதலில் நெடிய அனுபவம் கொண்டிருக்கின்றார்.
- பேரவை வெளியிடும் ‘தமிழ் அறிவியல்’ ஆராய்ச்சி இதழ் ஆசிரியர் குழுவில் பங்களிப்பு மூலம் அவர் தொடர்ந்து அறிவார்ந்த பணிகளில் பங்களித்து வருகிறார்.
- நியூ செர்சியில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒருங்கிணைப்பு கூட்டம்
- ஹார்வர்ட் தமிழ்த் துறைக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி
- நியூசெர்சி தமிழ்ப் பேரவை நியூசெர்சியில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் அமைப்பான நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் தலைவராகவும், நிர்வாகக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு, சமூக நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்தி உள்ளார்.
- நியூசெர்சி தமிழ் சங்கத்தில் உறுப்பினராகவும் செயற்குழு உறுப்பினராகவும் கபிலன் முன்பு பணியாற்றியுள்ளார்.
- நியூசெர்சி ஒருங்கிணைந்த தமிழ்ப்பள்ளிகள் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த அமைப்பு நியூசெர்சி மாநிலம் முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளை ஒன்றிணைத்து இருமொழி முத்திரை போன்ற முயற்சிகளை மேற்கொண்டது.
- அமெரிக்க தமிழ்க் கலவிக்கழக (ATA) இயக்குநராகவும் பணியாற்றி பாடத்திட்ட மேம்பாடு மற்றும் ஆசிரியர் பயிற்சி மூலம் தமிழ்க்கல்வியை மேம்படுத்துவதற்கான பணியை மேற்கொண்டார்.
- ஆராய்ச்சிப் பணிகளில் தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருவது.
COVID நிவாரணப் பணிகளில் ஆண்டு முழுவதும் பல திட்டப்பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியவர் - தொடர்ச்சியான பணிகள், தமிழ் மொழி மீதான அவரது ஆழ்ந்த ஈடுபாடு, தமிழ் சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.
- கொராணா பேரிடர் காலங்களில் நியூ செர்சி தமிழ்ப் பேரவை சார்பாக வீடு தேடி உணவு மற்றும் அவசர மருத்துவ உதவி செய்தது.
- நியூ செர்சி தமிழ்ப் பேரவை மற்றும் இலங்கை தமிழ்ச் சங்கமுடன் கூடி மாவீரன் நாள் நினைவுநாள் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி தொடர்ந்து செய்வது.
- கொராணா பேரிடர் காலங்களில் நியூ செர்சி தமிழ்ப் பேரவை சார்பாக தமிழ் நாட்டில் நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவியது.
- மரபுக்கலைகளை ஊக்குவித்தல், மற்றும் வள்ளி கும்மி கலையை வட அமெரிக்காவில் இருக்கும் தமிழ் உறவுகள் கற்றிட உதவியது.
- நமது உயர் நிலைப்பள்ளி குழந்தைகளுக்கு கல்லூரி அடடமிஸ்ஸின்க்கு councelling தொடர்ந்து செய்துவருதல்.
- குமாரசாமி தமிழ் பள்ளியில் படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு Presidential Honor Society வாங்கிட அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருப்பது மற்றும் இருமொழி முத்திரை வாங்கிட மாணவர்களை ஊக்குவித்தல்,
உடல் நலம் பேணுதல். - Garden State Cheetahsம் நியூ செர்சி தமிழ் பேரவை இணைந்து நியூ செர்சியில் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியத்தை எடுத்துரைத்து வாரம்தோறும் குழுவாக ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி செய்வது மற்றும் உடல் நலத்தின் அவசியத்தை வலியுறுத்துவது.
- நண்பர்களுடன் சேர்ந்து 30 ஏக்கர் விவசாய நிலம் (பசுமை நிலம்) நியூ செர்சியில் வாங்கி organic காய்கறிகளை பயிரிடுதல் மற்றும் அடுத்த தலைமுறைக்கு நமது கிராமிய வாழ்வியலை கொண்டு செல்லுதல்.