பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்
தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!












கார்த்திகேயன் பெருமாள். சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், பேரவையின் அரசுத்தொடர்பு, தமிழ் கூறும் தலைமுறை, வணக்கம் வடஅமெரிக்கா இயல், உணவுத்திட்டமிடல், நிதித்திரட்டல் உள்ளிட்ட பல குழுக்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். Association of Indo Americans(AIA), Team, We Reach Out, விரிகுடா குறள் கூடம், Bay Area Fine Arts (BAFA) மற்றும் CTA (California Tamil Academy) போன்ற பல அமைப்புகளில் தன்னார்வத் தொண்டராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர்.
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர், Marketing and Sponsorship குழுத் தலைவர், NGO குழு மற்றும் பல்வேறு குழுக்களில் திறம்பட பணியாற்றியவர். 2015-ஆம் ஆண்டு தமிழகத்தில் பெருமழையால் ஏற்பட்ட சேதத்திற்கு USD 320,000-க்கும் மேலாகத் தொகை திரட்டும் பணியில் தமிழ் மன்ற செயற்குழுவோடு இணைந்து திறம்பட பணியாற்றியவர். 2017-ஆம் ஆண்டு தமிழ் மன்றத்தின் மூலம், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய நிதித்திரட்டும் அணியில் முக்கியப் பங்காற்றியவர். 2020-ம் ஆண்டு NGO குழுவின் மூலமாக COVID நிவாரணப் பணிகளில் ஆண்டு முழுவதும் பல திட்டப்பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக அல்லும் பகலும் பணியாற்றியவர்.