தலைமைத்துவம்
You make friends by lying and enemies by telling the truth.
இது விரைவான உலகம். உடனுக்குடனே பொருளை விற்கணும்; அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரணும். பொருளியல் சார்ந்த வணிக உலகில், அப்போதைக்கப்போது எது தேவையோ அதைச் சொல்லிக் கடந்து போய்க் கொண்டே இருப்பர். புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் சோசியல் அமைப்புகளில் அது சரிவராது. சக மனிதனின்பால் அக்கறையும் அன்பும் காண்பிக்க வேண்டும். சில நேரங்களில் கசப்பே ஆயினும் உள்ளதை உள்ளபடி சொல்லித்தான் தீர வேண்டும். இனிப்பு முலாம் பூசப்பட்ட பேச்சுகள் தற்சமயத்துக்கு நன்றாக இருந்தாலும், அடுத்த தருணத்தில் அது ஏமாற்றத்தையே கொடுக்கும். உண்மையாக இருந்து விட்டால், அப்போது ‘அன்பாப்புலர்’ என்பதாக இருக்க நேரிட்டாலும், தொலைதூரப் பார்வையில் தலைநிமிர்ந்து நடக்கலாம் நெல்லிக்காய் போல! அப்போது கசப்பாக இருந்தாலும் பிற்பாடு இனிக்க வல்லது!
சக தமிழர்கள், அமைப்புக்காய் உழைத்த முன்னோடிகள், அவமானத்துக்கு ஆட்பட நேரிடும் போது, துணிச்சலுடன் அறச்சீற்றம் கொள்கின்றார். 2012. பொறுப்பினைத் துச்சமெனத் துறந்து பீடுநடை போடுகின்றார். அது அவரது மாண்பினைக் காண்பிக்கின்றது.
2014 பேரவை விழா. அவராக முன்வந்து வியப்பளிக்கும் வகையில் ஒரு வேலையைச் செய்கின்றார். விழாவுக்கு மக்கள் வருகின்றனர். Truth, Transparency & Trust. மக்களே, விழாவுக்கு வந்தோருள் கிட்டத்தட்ட எல்லாரும் எனச் சொல்லக் கூடிய வகையில், அந்த நினைவுச்சின்னத்தின் முன் படம் எடுத்து, சோசியல் மீடியா எங்கும் அந்த நினைவுக்காட்சிதான். பிற்பாடு, பேரவை அதற்கான செலவு தொகையை அவருக்குக் கொடுக்கின்றது. அந்தத் தொகையைத் திரும்பவும் பேரவைக்கே கொடையாகக் கொடுத்து விடுகின்றார். தொகை சிறியதாய்த் தோன்றலாம் சிலருக்கு, ஆனால் அந்த மனம்?
மக்கள் தொண்டன் விஜய் மணிவேல் தலைமை ஏற்போம், அணி வகுப்போம், ஆதரவளிப்போம்!!
-பழமைபேசி. 05/22/2024.