Shan Kuthalingam
For FeTNA - Board of Director
டுவின்சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் தலைவர். பேரவையின் அரசுத்தொடர்பு, கல்வியியல் முதலான குழுக்களில் பணியாற்றியவர். தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் பொறுப்பு, பேராளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டவர். கலை, இலக்கியம், கல்விப் பணிகளுக்காகத் தொடர்ந்து தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வருபவர்.
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
- பேரவையின் அமெரிக்க அரசும் – தமிழ் சங்க நிதியும் கமிட்டியில் பணி ஆற்றி இருக்கிறேன்.
- டுவின்சிட்டிஸ் தமிழ் ஆசோசியேஷனில் இரண்டு முறை தலைவராக 2016-17, 2022-24
- டுவின்சிட்டிஸ் தமிழ் ஆசோசியேஷனில் இயக்குனராக 2018-2022, 2024-தற்போதுவரை
- மினசோட்டாத் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராக 2010இல் இருந்து மூன்று ஆண்டுகள் தமிழாசிரியராக.
- டுவின்சிட்டிஸ் பாடசாலையின், நிறுவனர், முதல்வராக 2013ஆம் ஆண்டு துவக்கம் 2 ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்தேன்.
- டுவின்சிட்டிஸ் தமிழ் ஆசோசியேஷனில் ஹாவர்டு தமிழிருக்கை, சென்னை வெள்ள நிவாரணம், நலிந்த தமிழ்க் கலைஞர்கள் உதவி – நிதிதிரட்டல் மற்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிகழ்ச்சிகளுக்கு தலைமைப் பொறுப்பு ஆற்றி இருக்கிறேன்.
- பல்வேறு கமிட்டியில் தலைமை பொறுப்பு ஆற்றி இருக்கிறேன்.
- விருந்து உபசாரக்குழுவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளேன்.
- அண்டை மாநில சங்கங்களோடு இணைந்து கலைவிழாக்கள் மினசோட்டாவில் நடைபெற பல்வேறு கமிட்டிகளில் தலைமைப் பொறுப்பு ஏற்று சிறப்பாக நடத்தி உள்ளேன்.
ஆற்றிய மற்ற பணிகள்
- தமிழ்ப்பள்ளிப் பாடத்திட்டங்களைச் சீராய்வு செய்தும், முறைப்படுத்தியும் வகுப்புகளைச் செம்மைப்படுத்தி உள்ளேன்.
- உணவுக்கொடை மையங்களில் தன்னார்வப் பணியாளனாகப் பணியாற்றி உள்ளேன்.
- சமூகவலைக் குழுக்களின் மூலம் பல அவசரகால ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டதில் பங்கு கொண்டிருக்கின்றேன்.
- FeTNA இயக்குநர்(BoD) என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை நன்கு உணர்ந்த நான், விருப்பு வெறுப்பின்றி தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பேன் என்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் என்றும் உறுதி அளிக்கின்றேன்.
- தங்களுடைய ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் நான் இந்தப் பணியை சிறப்பாகப் பொறுப்புணர்வுடன் செய்வேன் என்று உறுதி கூறுகின்றேன்.