Suba Sundaralingam
For FeTNA - Joint Treasurer
அமெரிக்காவில் தமிழர்நலன், தமிழ்க்கல்வி, கலை இலக்கியம் தொடர்பான பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகவும், போஸ்டன் அசோசியேசன் துணைத்தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றியவர். நிதிக்கணக்கீடுகளில் ஆழ்ந்த அனுபவம் மிக்கவர். பேரவையின் ஈழத்தமிழர்நலன், ஈழப்பணிகள், தமிழர்தொடர்புக் குழுக்களில் பணியாற்றி வருபவர்.
ஆற்றிய தமிழ்ப்பணிகள்
- அமெரிக்கா, கனடா நாடுகளில் தமிழர்நலன், அரசுத்தொடர்பு, ஈழத்தமிழர்நலன், ஈழப்பணிகள், தமிழர்தொடர்புக் குழுக்களில் பணியாற்றி வருபவர்.
- அமெரிக்காவில் தமிழர்நலன், தமிழ்க்கல்வி, கலை இலக்கியம் தொடர்பான பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராகவும், போஸ்டன் தமிழ் அசோசியேசன் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.
- நிதிக்கணக்கீடுகளில் ஆழ்ந்த அனுபவம் மிக்கவர்.பேரவையில் சமூகநலன், ஈழத்தமிழர் நலன் சார்ந்த குழுக்களில் பணியாற்றியுள்ளார்.
- பேரவையின் நிர்வாகம், நடைமுறை, சட்டக்கோப்பு குறித்தான அலுவல்களில் பங்களித்துள்ளார்.
- பல தடவைகள் பேரவையின் விழாவிற்கு சமூகமளித்தும், தொண்டும் செய்துள்ளார்.
- 2011ம் ஆண்டு போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக NOW WOW (New Opportunities for Wounded Widowed and Orphans of War) எனும் அறக்கட்டளையை நிறுவி, தலைவராக, கடந்த 12 ஆண்டுகளாக ஈழத்தமிழ் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்.
- NOW WOW இன் ஆரம்ப காலங்களில் இந்த அறக்கட்டளையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல வாய்ப்புகள் வழங்கிய பேரவைக்கு சிரம் தாழ்த்தி நன்றிஉணர்வை வெளிப்படுத்தி வருபவர்.
- பேரவையில் ஈழத்தமிழர்கள் சம்பந்தப்பட்ட குழுமத்தில் இணைந்து பணியாற்றுபவர்.
- பொஸ்ரன் தமிழ் சங்கம் (BTA) தொடங்கிய காலத்திலிருந்து கடந்த 34 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளார்.
- பல கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார்.
- 2004 இல் ஆழிப்பேரலை இயற்கை அழிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பொஸ்ரன் தமிழ் சங்கத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
- ஈழத்தில் நம் உறவுகள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அதனை தடுக்க தம்மால் முடிந்தளவுக்கு மனித உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர்.
- பல தடவைகள் Washington இலும் New York இலும் ஈழத்தமிழரை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் பங்களித்தவர்.
- TGTE ஆரம்பிக்கப்பட்ட போது ஒரு முன்னிலை உறுப்பினராக பணியாற்றியவர்.
சமூகப்பணிகள்
https://shorturl.at/yaDkw போரில் காயமுற்றவர்களுக்கும் வாழ்க்கைத் துணை இழந்தவர்களுக்குமான மேம்பாடு, புனரமைப்பு, மறுவாழ்வு என உதவுவதற்காய் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவி இன்று வரையிலும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றார் சுபா சுந்தரலிங்கம் அவர்கள்.
சுபா அவர்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு அவரது இந்த செவ்வியை வாசிக்கலாம்.