Vallikkannan Maruthappan

Vallikkannan Maruthappan

For FeTNA - Treasurer

பேரவையில் பல சீர்திருத்தங்களைச் செய்து வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களுக்குள் தொடர்பு, உறுப்பினர்களின் நிச்சயமற்ற சூழ்நிலைகளில் உதவி, நிகழ்வு மேலாண்மை போன்றவற்றுக்கு உதவியுள்ளார். கனடியத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் தமிழ் மரபு மாநாட்டின் அமைப்பாளர், அதைத் தொடர்ந்து 2020 மற்றும் 2021 மாநாடுகளின் மாநாட்டின் அமைப்பாளர் – மொத்தம் 3 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள்

  • கனடா தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியதன் வழி நிதி ஆள்கையில் தேர்ச்சி பெற்றவர்.
  • 2018 ஆம் ஆண்டு முதல் FeTNAவின் பிரதிநிதியாக விளங்குகிறார்.
  • 2017 ஆம் ஆண்டுக்கான உலகின் முதல் தமிழ் மரபு மாநாட்டின் அமைப்பாளர், அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளின்  மாநாட்டு அமைப்பாளர் . மொத்தம் 3 மாநாடுகளை வெற்றிகரமாக நடத்திய பெருமைக்குரியவர்.
  • 2023 , 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கனடா இந்திய கலை விழாவில் இணை நிறுவனராகவும் மற்றும் இணை அமைப்பாளராகவும் செயல்பட்டார்.
  • அமெரிக்க தமிழ்ச் சங்கத் தலைவர்கள் புலனக்குழுக்கான அட்மின்களில் ஒருவராக சிறப்பாக செயல்பட்டு வருபவர். இக்குழு மூலம் FeTNA இல் பல சீர்திருத்தங்களைச் செய்ய உதவியாகவும்,  வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களுக்குள் நல்ல தொடர்பினையும், உறுப்பினர்களின் நிச்சயமற்ற சூழ்நிலைகளில் உதவிகள் புரிந்தும், நிகழ்வு மேலாண்மை போன்றவற்றுக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார்.
  • 2017 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை கனடா தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர், முதன்மை அதிகாரியாகவும்  திறம்பட செயலாற்றி வருகிறார்.
  • FeTNA பெட்னாவின் மெய்நிகர் மாநாட்டின் 2020 தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
  • 2005 -2010 ஆம் ஆண்டுகளில் கனடாவிலுள்ள இயங்கி வரும் தமிழர் பூங்கா இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • 2001 முதல் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்ச் சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இயக்குநர் போன்ற பல பதவிகளில் தன்னார்வலராகப் பணியாற்றினார்.
  • 2013 ஆம் ஆண்டு கனடாவில்  தமிழ்நாடு சமூக மையம், 2017ஆம் ஆண்டில்,கனடாவில் கனடா தமிழ்ச்சங்கம், 2019ஆம் ஆண்டில் இந்தியாவில் MVK அறக்கட்டளையினை ஆகிய அமைப்புகளை நிறுவினார்.
  • 2005 ஆம் ஆண்டு முதல் FeTNA அமைப்பின் பல மாநாடுகளில் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்.
  • 1993 ஆம் ஆண்டு முதல் பத்தரிக்கையாளராகவும், ஊடகவியலாளராகவும் தன்னை நிரூபித்தவர்.

ஆற்றிய மற்ற தமிழ்ப்பணிகள்

  • தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளில் விசா மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இறந்த உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு செல்வதில் எளிமையாக்கி, இந்திய டோராண்டோ தூதரகம் மற்றும் இந்திய தூதரகம் ஒட்டாவாவுடன் நன்கு தன்னை இணைத்துக்கொண்டதோடு மக்களுக்கு  அயராது உதவிசெய்யக்கூடியவர்.
  • கனடாவில் உள்ள ஈழத்தமிழ் சங்கங்கள், இந்திய சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றுடன் நன்கு இணைத்து, முக்கிய பிரச்சினைகளுக்கெல்லாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர
  • மனைவி மற்றும் மகள்களின் உதவியுடன் கோவிட்19 தொற்றுநோய்களின் போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சுமார் 10 வாரங்களுக்கு மேலாக உணவுகள்  தயாரித்து இந்திய மாணவர்களுக்கு உணவளித்தவர் .
  • கோவிட்19 தொற்றுநோய்களின் போததமிழ்ழ்க்கிராமியக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் மேடை இசைக்கலைஞர்கள் என ஐம்பதிற்கும் மேற்பட்டோருக்கு நிதியுதவி அளித்தவர்.
  • கனடாவில் உள்ள சமூக அமைப்பு மூலமாக இதுவரை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்பணியை 2006ம் ஆண்டில், இவர் பொதுநல இயக்குனராக இருந்தபோது   தொடங்கியதோடு மட்டுமல்லாது, தொடர்ந்து நடத்த ஏலம் மூலமாக பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்தியவர்.
  • 2018 ஆம் ஆண்டிலிருந்து முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர்.A.P.J.அபதுல் கலாம் அவர்கள் பெயரில்,ஒவ்வொரு  வருடமும் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வீதம்  வழங்கிவருகிறார்
  • ஹார்வோர்டு தமிழ் இருக்கை, டொரொண்டோ தமிழ் இருக்கை இரண்டிற்கும் தன்னால் இயன்ற நன்கொடை கொடுத்தும், மற்ற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தி சுமார் $100,000 நிதியினையும்  திரட்டியுள்ளார்.
  • பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் குளிரூட்டப்பட்ட விருந்தினர் மாளிகை அமைத்து, அதனைக் குறைந்த  வாடகைக்கு ரூ.500க்கு 24/7 மணி நேரமும் தங்கும்படி, மேற்கத்திய விருந்தினர்கள் தங்களது பாரம்பரிய தன்மையை மறவாது வாழ,சொந்த ஊருக்கு வருவதை ஊக்கப்படுத்தியவர்.
  • பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது பெற்றோரின் பெயரில் திருமண மண்டபம் (குடும்பச் சொத்து) சிறப்புற அமைத்து வருகிறார். பொன்னமராவதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வசதியற்ற குடும்பங்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கவேண்டும் என்ற தனது தந்தையின் நோக்கத்தை நிறைவேற்ற பாடுபடுபவர்.

பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்

தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!

Scroll to Top