A leader who listens

Vetrivel Periyaiyah

For FeTNA - Board of Director

பேரவையின் நிதிதிரட்டல்க்குழு, வாழ்வியல், மருத்துவம் முதலான குழுக்களில் தொடர்ந்து பணியாற்றி வருபவர். சியாட்டில் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து, சங்கத்தை நான்கு மடங்கு அளவுக்கு உறுப்பினர் சேர்க்கையிலும் நிதிப்பெருக்கத்திலும் மேன்மை கண்டவர். தமிழ்ப்பள்ளி சார்ந்த பணிகளில் தொடர்ந்து முனைப்புக் காட்டி வருபவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள்

  • 2022-24-வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வாழ்வியல், தமிழ் பழ்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு உறவு குழுவில் உறுப்பினராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.
  • 2023-வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழாவில் (FeTNA தமிழ் Convention) நிதி திரட்டுதல் மற்றும் பதிவுக் குழுவில் உறுப்பினராக பொறுப்பேற்று, விழாவும் சிறப்பாக வெற்றி பெற நண்பர்களோடு இணைந்து உழைத்தேன்.
  • 2014 ஆம் ஆண்டிலிருந்து சியாட்டல் தமிழ்ச் சங்க‌த்தில் தன்னார்வத் தொண்டராக பணியாற்றி வருகிறேன்.
  • 2014-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு தமிழ் சங்க‌த்தில் உணவு, தொழில்நுட்பம், நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட குழுக்களில் பணியாற்றி விழாக்கள் சிறப்பாக நடைபெற பெரிதும் உதவினேன்.
  • 2015-ல் தமிழகத்தில் பெருமழையால் ஏற்பட்ட சேதத்திற்கு நிதி திரட்டுதல் தமிழ்நாடு அரசு மற்றும் NGO குழுவில் இணைந்து, தமிழகத்தில் பல நல்ல திட்டப்பணிகள் செய்து, தமிழக மக்களுக்கு உதவி புரிந்தேன் மற்றும் NGO குழுவில் தொடர்ந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
  • 2020-ம் ஆண்டு COVID பெருந்தொற்று நிவாரணப் பணிகளில் நிதி திரட்டுதல், நிதி வழங்குதல், பிராண வாயு செரிவூட்டி வழங்குதல், நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதர மேம்பாடு, உணவு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பல திட்டப்பணிகளில் பணியாற்றினேன்.
  • 2021-ம் ஆண்டு முதல் COVID கோவிட் பெருந்தொற்றில் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் படிப்பிற்கு பள்ளி முதல் கல்லூரி வரை உதவிதொகை வழங்கி வருகிறோம்.
  • இன்றும் NGO குழுவில் இணைந்து, தமிழகத்தில் பிராண வாயு செரிவூட்டிகளை தேவைப்படும் பயணாளிகளுக்கு தமிழக மக்களுக்கு தொடர்ந்து தொடர்ந்து உதவி வருகிறேன்.
  • 2021 ஆம் ஆண்டு சியாட்டல் தமிழ்ச் சங்க‌த்தின் உறுப்பினர் சேர்க்கை குழுவின் முதன்மை பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினேன்.
  • 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு சியாட்டல் தமிழ்ச் சங்க‌த்தின் தலைவராக பணியாற்றினேன்.
  • சியாட்டல் தமிழ்ச் சங்க‌த்தின் தலைவராக பணியாற்றிய பொழுது, எங்களது குழுவொடு இணைந்து,
    • உறுப்பினர்களைப் பத்துமடங்கு அளவுக்கு உயர்த்தினோம்.
    • நிதி ஆதாரத்தைப் பெருமளவு உயர்த்தி இருக்கின்றோம்.
    • நிகழ்ச்சி நடத்தும் அமைப்பு என்பதனை மாற்றி மக்களை நாடிச் செல்லும் அமைப்பாக மாற்றி இருக்கின்றோம்.
    • சங்கத்தை எளிதில் எதற்கும் நாடும்படியாக மாற்றியுள்ளோம்.
    • பல்வேறு மருத்துவ உட்பிரிவுகளைக் கொண்ட (நியூராலஜி, கேஸ்ட்ரோ, கார்டியோ) மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளோம்.
    • உயில் எழுதுதல், சொத்துப்பராமரிப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம்.
  • United all other Tamil organizations and NGOs, partnering with them on their each event and helping for good causes.
  • Helping and promoting Tamil community owned businesses and schools like restaurants, shops, realtors, dance schools, Tamil schools, etc.
  • Tie up with local city councils and work with them on various activities like clean sweep events, summer events, adopting a street, trail, etc.
  • Closely working with Indian embassy, FeTNA and other Tamil sangams on Incidents, Immigration issues, Emergencies, Domestic violations and Rescue. We extend this for non-Tamilas well.
  • Closely working with other Indian organizations and representing Indian community in Washington state.

வாக்குறுதிகள்

  • FeTNA இயக்குநர்(BoD) என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை நன்கு உணர்ந்த நான், விருப்பு வெறுப்பின்றி தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பேன் என்றும் அனைவரையும் அரவணைத்துச் செல்வேன் என்றும் உறுதி அளிக்கின்றேன்.
  • தங்களுடைய ஆதரவோடும் வாழ்த்துக்களோடும் நான் இந்தப் பணியை சிறப்பாகப் பொறுப்புணர்வுடன் செய்வேன் என்று உறுதி கூறுகின்றேன்.

பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்

தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!

Scroll to Top