Vijay Manivel

A leader
who listens

Vijay Manivel

For FeTNA - President

திரு. விஜய் மணிவேல் அவர்கள் அமெரிக்காவின் தலையாயத் தமிழ்த்தலைவர்களுள் ஒருவர். இருபது ஆண்டுகளுக்கும் முன்பாக ஒரு அடிப்படைத் தொண்டனாகக் களமிறங்கி, தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டதோடு தன்னையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டு இன்று சிறந்த தலைவராகத் திகழ்கின்றார்.

பேரவை துணைத்தலைவர்,  மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவர், பேரவை நிர்வாகக்குழு உறுப்பினர், பேராளர், பேரவை ஆயுள் உறுப்பினர், செயின்ட் லூயிஸ் முருகன் கோவிலின் நிறுவன உறுப்பினர் என எண்ணற்ற பொறுப்புகளில் தொடர்ந்து திறம்படச் செயலாற்றி வருபவர்.

ஆற்றிய பேரவைப் பணிகள்

  • துணைத்தலைவராக இருந்து மாற்று வழிகாட்டுதல்களைத் துணிவுடன் மேற்கொண்டமை (2022 – 2024)
  • மெம்ஃபிஸ், தென்மத்தியத் தமிழ்ச்சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, பெற்றோரை இழந்த தமிழ்க்குழந்தையை உற்றார் உறவினரிடம் சேர்ப்பிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் முன்னிலை வகித்தமை
  • இயன்றமட்டிலும் சரியான தகவல்களை உடனுக்குடனே பொதுக்குழு உறுப்பினர்களுக்குக் கொண்டு சேர்த்தமை.
  • உறுப்பினர் சேர்க்கைக்குழுவில் பாராமுகமாகவும் மெத்தனமாகவும் இருந்த சங்கங்களை முடுக்கி விட்டமை (2022 – 2024)
  • சட்டக்கோப்புக் குழுவில் பல திருத்தங்களை ஆரம்பகட்டத்திலேயே சரிப்படுத்தியமை (2022 – 2024)
  • விழா வழிகாட்டுக்குழுவின் உறுப்பினராக வழிகாட்டுதல்களைப் பகிர்ந்தமை (2022 – 2024)
  • உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிட்டுப் பேராளர் பதிப்பை துரிதப்படுத்தியமை (2022 – 2024)
  • விழாக்களுக்காக இயன்றவரை கொடைபெற உழைத்தமை (2022 – 2024)
  • செயற்குழு உறுப்பினராக பேரவை விழாப் பணிகளும் அமைப்புப் பணிகளும் (2010-2012)
  • பேரவை ஆயுள் உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளராக (2012 – இன்றும்)
  • பேரவை இணையக் கட்டமைப்பு, பராமரிப்பு, நிர்வாகம் (2006 – 2012)பேரவைக்குச் செலவுகளேதுமில்லாமல்.
  • பேரவை விழாவுக்கான பதிவுக்குழு, உணவுக்குழு, நிகழ்ச்சிக்குழு எனப் பல்வேறு குழுக்களில் (2006 – 2018)
  • பேரவையின் 2017ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்குழுத் தலைவராகப் பணியாற்றியமை
  • பேரவையின் 20 ஆண்டுகால ஆவணங்களைச் சேகரித்து தொகுத்து ஆவணப்படுத்தியமை
  • பேரவைக்கான புதிய இணைய தளத்தை வடிவமைத்துச் செயற்படுத்தியமை (2011)
  • பேரவை விழாவுக்கான பதிவினையும் கட்டணம் செலுத்துதலையும் டிஜிட்டல் ஆக்கியமை (2010)
  • பேரவை விழாவுக்கான விருந்திநர் விசா, பயணச்சீட்டு போன்றவற்றை நிர்வகித்தமை (2009-2011)
  • பேரவை விழாவுக்கான விளம்பரப் பணிகள் மேற்கொண்டமை (2017)
  • பேரவை இதழான அருவி என்பதனை மின்னிதழாகக் கட்டமைத்தமை (2010)

ஆற்றிய மற்ற தமிழ்ப்பணிகள்

  • மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவராக (2016-2017); நிர்வாகக்குழு உறுப்பினராக (2018-2019)
  • செயின்ட் லூயிஸ் முருகன் கோவிலின் நிறுவன உறுப்பினர் (2020 – இன்றும்)
  • மிசெளரி தமிழ்ச்சங்கம் இணையதள இயக்குனராக (2006-2007)
  • தமிழர் உரிமைக்கான கவன ஈர்ப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தமை
  • தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கான நிதிதிரட்டல் நிகழ்வுகளைக் கட்டமைத்தமை
  • அமெரிக்கத் தமிழ்க்கல்விக் கழகம், பள்ளிகளுக்கான இலச்சினை வடிவமைப்பு
  • தமிழ் இணைய மாநாட்டுக்கு இணை ஒருங்கிணைப்பாளராகவும் இணைய வேலைகளும்
  • தமிழ் அமைப்புகளுக்கான இணைய தளங்களைக் கட்டணமேதுமின்றி கட்டமைத்துக் கொடுத்தமை
  • அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான தகவற்தொடர்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி நிர்வகித்து வருதல்
  • அமெரிக்காவெங்கும் உள்ள நகரங்களில் இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலரது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியமை
  • ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டியமை
  • சென்னை பெருவெள்ளம் நிதி திரட்டியமை
  • கொரொனா காலத்தில் நலிந்த கலைஞர்களுக்கென நிதிதிரட்டி அளித்தமை
  • விசா, இமிக்ரேசன் உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொண்ட தமிழ்க்குடும்பங்களுக்கு காங்கிரஸ்மென், செனட்டர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு உகந்த உதவிகளைப் பெற்றுத் தந்தமை
  • தீவிபத்தில் சிக்குண்டு உடைமைகளை இழந்தோருக்கு பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்தமை
  • நலிந்த தமிழ்க்கலைஞர்களை அவர்கள்தம் வாழ்வில் உயர்வதற்காய்ப் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொண்டமை
அமெரிக்காவில் இருக்கும் எல்லாத் தமிழ்ச்சங்கத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, கலை, இலக்கியம், பண்பாடு, பேரிடர் போன்றவற்றுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்யும் அமைப்பை பொறுப்பேற்று நடத்தி வருதல்.
பேரவைக்கான இணையத்தைப் பெரிய அளவில் நவீனத்துடன் வடிவமைத்து, இருபது ஆண்டுகால ஆவணங்களைச் சேகரித்துத் தொகுத்துக் கட்டமைப்பை உருவாக்கியது.
15 ஆண்டுகட்கும் மேலாகத் தொடர்ந்து விழாக்களின் பல பணிகளுக்கான துறைத்தலைவராகச் செயற்பட்டமை, எடுத்துக்காட்டாக, பயணக்குழு, பணப்பரிவர்த்தனைச் செயலாக்கக்குழு, விருந்தோம்பல்க்குழு, விழா நேரலை செயலாக்கக்குழு உள்ளிட்ட பல குழுக்களின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்பட்டமை.

இலக்கு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பணிகளை கூடுதலான  மாகாணங்களுக்கும் விரிபடுத்துதலும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கட்டமைத்தலும். தமிழ்ச்சங்கங்களே அடிப்படையென நிறுவுதல். சங்கங்களுடனான கூட்டியக்கம் (federalism) மேம்படுத்துதல்.

அரவணைப்பு

பேரவையின் அங்கமாக இருக்கின்ற தமிழ்ச்சங்கங்களின்பாலும், மற்றுமுள்ள தமிழ் அமைப்புகளின்பாலும் அக்கறையுடன் செயற்படுதல். பேரவையின் நிர்வாகத்தில் சங்கத்தின் பங்கினை நேரடியாகக் கொண்டு வருதல். எல்லாப் பேராளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஊர்கூடித் தேர் இழுக்கும்படியான ஒருங்கமைப்பு மேற்கொள்வது.

பொறுப்பு

மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாகச் செயற்படுத்தலுக்கான கடமையுணர்வை உறுதிப்படுத்துதல். செயற்குழு முடிவுகளை உடனுக்குடனே பகிரங்கமாகப் பொதுவெளியின் பார்வைக்கு வைத்தல்.

தொலைநோக்கு

அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பார்வையுடன் செயற்பட்டுப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதும் விழிப்புணர்வை ஊட்டுவதும். அமெரிக்க விழுமியங்களைக் கொண்ட வழிகாட்டு ஆவணங்களைக் கட்டமைப்பது.

வெளிப்படை

மேற்கொள்ளும் பணிகளின் நிலைப்பாடு, கணக்குவழக்குகள், உறுப்பினர் அமைப்புகளின் தொடர்பு முதலானவற்றை வெளிப்படையாக வைத்துக் கொள்தல். இணையப் பக்கத்தைத் திறம்படப் பராமரிப்பதன் வழி அதனைச் சாத்தியமாக்குவது.

அறம்

தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடாமல் நெறிகளுக்கொப்பப் பணிகள் இடம் பெறுதலை உறுதிப்படுத்துதல். சாதி, சமய, இடம், பால் முதலான பேதங்களோ பக்கச்சாய்வோயின்றி ஒவ்வொரு செயலும் இடம் பெறும் வகையிலான நிர்வாகத்தினைக் கட்டமைப்பது.

கடந்த இரண்டு ஆண்டுகால பேரவைத் துணைத்தலைவராக எனது நிலைப்பாடுகள் சில உங்கள் பார்வைக்கு.

மதிப்புரைகள்

FAQs

நீங்கள் ஏன் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகின்றீர்கள்?

கடந்த 20 ஆண்டுகளாக, பல்வேறு தளங்களில் தன்னார்வத் தொண்டு ஆற்றி வருகின்றேன். தமிழ்ச்சங்கத் தலைவராக, பேரவைச் செயற்குழு உறுப்பினராக, பேரவைக் குழுக்களின் தலைவராகவும் உறுப்பினராகவும், தமிழ்ச்சங்கத் தலைவர்கள் குழு நிர்வாகியாக, தமிழ்க்கல்வி மேம்பாட்டுக்குழு உறுப்பினராக, ஆற்றுப்படுகைகள் தூய்மைக்குழுவைச் சார்ந்த தொண்டனாக எனப் பல்வேறு பணிகள் செய்து வந்து கொண்டிருக்கும் வேளையில், பேரவையின் செயற்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ஆயுள் உறுப்பினரான நான் உணர்கின்றேன். இழந்த மரபினை மீட்டெடுக்கவும், பேரவைப் பணிகளில் மேம்பாடு காணவும் என்னால் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு செம்மைப்படுத்த முடியுமெனக் கருதி போட்டியிடுகின்றேன்.

தமிழர்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற நாட்டம் எப்படி வந்தது?

உண்மையில் சொல்லப் போனால், ஊரில் இருந்தவரைக்கும் எனக்கு எந்த உணர்வும் இருந்ததில்லை. என்னை ஒத்த வயதுள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு, பொழுதைக் கழிப்பதுதான் நான் செய்யும் வேலையாக இருந்தது. இங்கு வந்த பிறகுதான், சிறிது சிறிதாக என்னுள் தாயகத்தின் மீதும், தமிழர்களின்பாலும், தமிழ் மொழியின்பாலும் ஒரு பற்றுதல் ஏற்பட்டது. முதலில் சிற்சிறு பணிகளைத்தான் செய்து கொடுத்தேன். 2005 காலகட்டத்தில், அமெரிக்காவின் தமிழர் வளர்ச்சியில் இளைஞர்களுக்கான போதாமை இருந்தது. அதன்காரணம், நாம் செய்யாவிட்டால் வேறு எவர் செய்வர் எனக் கருதியதுதான் முக்கியமான காரணம்.

எப்படி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கான பணிகளுக்குள் நுழைந்தீர்கள்?

நான் மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு செய்யும் பங்களிப்பைக் கேள்வியுற்ற அன்றைய பேரவைத் தலைவர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவே, இரவி சுந்தரம் அவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டேன். இரவி சுந்தரம் அவர்கள், பேரவையின் இணையதளம் மற்றும் தகவல்க் கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். அவரோடு சேர்ந்து நானும் செய்ய வேண்டிய பணிகளைப் பங்கிட்டுக் கொண்டேன். அதன்பிறகு முனைவர் முத்துவேல் செல்லையா அவர்களின் தலைமையின்கீழ் பல்வேறு பணிகள் என்னை வந்தடைந்தன.

எப்போது முழுமூச்சாக உழைக்கத் துவங்கினீர்கள்?

2007ஆம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். அவ்விழாவிற்குப் பிறகு முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் தலைவரானார். ஒரு நாள் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கையில், எனது மனதிற்பட்டதைக் கூறியதும் அவர் என் மேல் நம்பிக்கை கொண்டவரானார். இது என் வாழ்வில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். நல்லதொரு வாய்ப்பினை எனக்களித்தமைக்கு அவருக்கு என்றென்றும் நன்றி உடையவனாகிறேன்.

ஊதியத்தை எதிர்நோக்கி ஒன்றைச் செய்வார்கள். அல்லது, புகழ், விளம்பரத்திற்க்காக உழைப்பார்கள். உங்களைப் பொறுத்த வரையில் இதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கையில், என்றேனும் அயர்ச்சியாக, சலிப்பாக உணர்ந்தது உண்டா?

கிடையவே கிடையாது. கடந்த இருபது ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில், உற்சாகம், ஊக்கம் என்பது படிப்படியாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. முனைப்பின் வீரியம் என்னுள் கிளர்ந்துவிட்டுப் பீறிடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உள்ளூர்த் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் என் குழந்தைகள். குழந்தைகளுக்காக உழைப்பதை எந்த ஒரு தமிழனும் அயர்ச்சியாக நினைப்பதில்லை.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பேரவையானது தமிழுக்கும், தமிழருக்குமான ஒரு கட்டமைப்பு. அதைப் போற்றுவது நம் கடமை. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து, எந்த ஒரு தயக்கமும் இன்றி நாட வேண்டும். ’கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என்பதை வலியுறுத்துகிறேன். தமிழ் உறவுகளுக்கான இடம் இது. புலம் பெயர்ந்த மண்ணில், நமது பண்பாடு பேணவும், மொழியை வளர்த்தெடுப்பதிலும் பேரவையின் பங்கு மகத்தானது.

பேரவை மேன்மை அணி வேட்பாளர்கள்

தங்கள் பொன்னான வாக்குகளை பேரவை மேன்மை அணிக்கு அளித்து வெற்றிபெறச் செய்திடுவீர்!

Golden Times. Colorful Memories.

Scroll to Top