Vision & mission

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (பெட்னா), வட அமெரிக்கத் தமிழர்களுக்காக, வட அமெரிக்கத் தமிழர்களால், அமெரிக்காவின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு. எங்கள் அணி 2024ம் ஆண்டு பேரவையின் செயற்குழுவிற்கு உங்களால் தேர்ந்து எடுக்கப்பட்டால், கீழ்கண்ட உறுதி மொழிகளை மனமார ஏற்றுக்கொள்வோம்!

01

பேரவையில், எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளும், செயல்களும், இங்கு வாழும் தமிழர்களையும், நம் தாய் மொழியான தமிழையும், நம் வளர்ச்சியையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மட்டுமே மையப்படுத்தி இருக்கும். வெளிப்படையானதாகவும் இருக்கும்.

02

அரசியல் தொடர்பு தேவைப்படும் போது, நம் தமிழர்களின்/தமிழின் மேம்பாட்டுக்காக மட்டும், இந்த வட அமெரிக்க நாட்டு அரசியல் அமைப்புகளையும் (எந்த கட்சியின் சார்பின்றி), அரசையும், அரசியல்வாதிகளையும் சந்தித்து, நம் தேவைகளைக் கூறுவோம். வாய்ப்பு கிடைக்கையில் அவர்களை நம்விழாக்களுக்கும் அழைப்போம்.

03

நம் மக்களிடையே தமிழ்/தமிழர் மரபை, பண்பாட்டை, இயல் இசை, இலக்கிய ஆர்வத்தை, வளர்க்க, மேம்படுத்த, இரசிக்க, நம் தொப்புள் கொடி நாடுககளில் இருந்து, அங்கு உள்ள சிறப்பும் திறமையும் மிக்க, வாய்ப்பு கிடைக்காத, நலிந்த கலைஞர்களை, வரவழைத்து, அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, பாராட்டி, பெருமைப்படுத்துவோம்.

04

வட அமெரிக்க நாடுகளின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தமிழ்ச் சங்கங்களைச் சார்ந்த தமிழர் குழந்தைகளுக்கும் மாணவர்ளுக்கும் தமிழ்க்கல்வியானது சென்று சேரவும், மேம்பாடு கொள்ளவும் அதற்கான பணிகள் தொடரச் செய்வோம்.

05

1988ல் நான்கு தமிழ்ச் சங்கங்களுடன் துவங்கிய நம் பேரவை, இன்று கிட்டத்தட்ட 65 தமிழ்ச்சங்கங்களுடன் பெருமைபட வளர்ந்துள்ளது. நம் பேரவையின் இந்த வளர்ச்சிப் பாதை தொடர, இந்த உறுப்பினர் சங்கங்கள் எண்ணிக்கை கூடிய விரைவில் 100 தமிழ்ச்சங்கங்களாக உயர, முழு மூச்சுடன் பாடுபடுவோம்.

06

பேரிடர்காலத்தில் தமிழ்ச்சமூகத்துக்குத் தேவைப்படுகின்ற பணிகளை, அந்தந்தப் பகுதி தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து மேம்பட்ட வகையில் செய்து முடித்திடத் தேவையான கட்டமைப்பினை உருவாக்குவோம்.

Scroll to Top