வேட்பாளார்களை
அறிந்து கொள்ளுங்கள்












தொலைநோக்கு
அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பார்வையுடன் செயற்பட்டுப் பங்களிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதும் விழிப்புணர்வை ஊட்டுவதும். அமெரிக்க விழுமியங்களைக் கொண்ட வழிகாட்டு ஆவணங்களைக் கட்டமைப்பது.
வெளிப்படை
மேற்கொள்ளும் பணிகளின் நிலைப்பாடு, கணக்குவழக்குகள், உறுப்பினர் அமைப்புகளின் தொடர்பு முதலானவற்றை வெளிப்படையாக வைத்துக் கொள்தல். இணையப் பக்கத்தைத் திறம்படப் பராமரிப்பதன் வழி அதனைச் சாத்தியமாக்குவது.
அறம்
தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு இடங்கொடாமல் நெறிகளுக்கொப்பப் பணிகள் இடம் பெறுதலை உறுதிப்படுத்துதல். சாதி, சமய, இடம், பால் முதலான பேதங்களோ பக்கச்சாய்வோயின்றி ஒவ்வொரு செயலும் இடம் பெறும் வகையிலான நிர்வாகத்தினைக் கட்டமைப்பது.
இலக்கு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பணிகளை கூடுதலான மாகாணங்களுக்கும் விரிபடுத்துதலும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கட்டமைத்தலும். தமிழ்ச்சங்கங்களே அடிப்படையென நிறுவுதல். சங்கங்களுடனான கூட்டியக்கம் (federalism) மேம்படுத்துதல்.
அரவணைப்பு
பேரவையின் அங்கமாக இருக்கின்ற தமிழ்ச்சங்கங்களின்பாலும், மற்றுமுள்ள தமிழ் அமைப்புகளின்பாலும் அக்கறையுடன் செயற்படுதல். பேரவையின் நிர்வாகத்தில் சங்கத்தின் பங்கினை நேரடியாகக் கொண்டு வருதல். எல்லாப் பேராளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஊர்கூடித் தேர் இழுக்கும்படியான ஒருங்கமைப்பு மேற்கொள்வது.
பொறுப்பு
மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டு, வெற்றிகரமாகச் செயற்படுத்தலுக்கான கடமையுணர்வை உறுதிப்படுத்துதல். செயற்குழு முடிவுகளை உடனுக்குடனே பகிரங்கமாகப் பொதுவெளியின் பார்வைக்கு வைத்தல்.